கும்பகோணம் அருகே டாஸ்மாக் பார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே டாஸ்மாக் பார் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார். கும்பகோணம் ஜான்செல்வராஜ் நகரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார் அருகே தள்ளுவண்டியில் சேட்டு என்பவர் பிரியாணி வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கும் டாஸ்மாக் பார் மேலாளர் மாரிமுத்துவிற்கும் நேற்று மதியம் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று மதியம் பிரியாணி வியாபாரி சேட்டுவின் நண்பர்கள் மகேந்திரன் மற்றும் கமால் பாட்ஷா ஆகியோர் பார் மேலாளர் மாரிமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டதுடன் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மாரிமுத்துவின் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மாரிமுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கும்பகோணம் நகர மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மகேந்திரன் மற்றும் கமால் பாட்ஷா ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories: