எம்ஜிஆர் நகர் மயானம் ஓராண்டு இயங்காது

சென்னை: கோடம்பாக்கம் மண்டலம், 138வது வார்டு, எம்ஜிஆர் நகர் மயானபூமியின் எரிவாயு தகனமேடையில் புதிதாக எல்பிஜி காஸ் மூலம் எரிக்கப்படும் நவீன மயானபூமி கட்டிடம் கட்டும் பணிநடைபெற உள்ளதால், இன்று முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி வரை இயங்காது. பொதுமக்கள் அருகிலுள்ள நெசப்பாக்கம் அல்லது சைதாப்பேட்டை மயானபூமிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இதேபோல், திருவிக நகர் மண்டலம், 65வது வார்டு, ஜி.கே.எம். காலனி பிரதான சாலையில் உள்ள மின்சார எரியூட்ட தகனமேடையில் பராமரிப்பு பணிநடைபெற உள்ளதால், இன்று முதல் மே மாதம் 3ம் தேதி வரை இயங்காது. பொதுமக்கள் அருகிலுள்ள 64வது வார்டு, நேர்மை நகரில் உள்ள எரிவாயு மயானபூமியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Related Stories:

>