×

பெட்ரோல் விலை உயர்வுக்கு நூதன எதிர்ப்பா?: நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து ஜனநாயக கடமையாற்றிய நடிகர் விஜய்..!!

சென்னை: நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து நடிகர் விஜய் ஜனநாயக கடமையாற்றினார். சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு மிகவும் பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, 3 மணி நேரத்தை கடந்துள்ளது. பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் காலையிலேயே தங்களது வாக்கை செலுத்திவிட்டனர். முக்கிய நடிகர்கள், திரையுலக பிரபலங்கள் எல்லாம் தங்களுடைய வாக்கை செலுத்தி இருக்கின்றனர். மக்களும் தங்களுடைய வாக்கினை எந்தவித தயக்கமும் இன்றி வாக்குச்சாவடிக்கு வந்து செலுத்த வேண்டும் என்று சில நடிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக சென்னை நீலாங்கரையில் இருக்கக்கூடிய வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறார். நீலாங்கரை வீட்டில் இருந்து நடிகர் விஜய் சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்தார். சமீபத்தில் பெட்ரோல், டீசல் மீதான விலையுயர்வு பொதுமக்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான ஏராளமான மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் விஜய், சைக்கிள் ஒட்டியவாறே வாக்குச்சாவடிக்கு வந்திருப்பது பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய வாக்கை செலுத்தியிருக்கிறார். நீலாங்கரை வாக்குப்பதிவு மையத்திற்கு வந்து அவர் தம் வாக்கினை செலுத்தினார். ரசிகர்கள் சூழ்ந்துகொண்டிருக்கின்றனர். ரசிகர்களின் உற்சாக சத்தத்தையும் கேட்க முடிகிறது. கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கக்கூடிய சூழலில் காவல்துறை அதிகாரிகள், பாதுகாப்பாக அழைத்து சென்று அவருடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற வைத்திருக்கின்றனர்.

விஜய் செய்தியாளர்களை சந்திப்பாரா? தான் சைக்கிளில் வந்ததற்கான நோக்கம் என்ன? மறைமுகமான அரசியல் குறியீடு அதில் இருக்கிறதா என்பது போன்ற பல வினாக்களுக்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து உரையாடினால் தெரியவரும். பெட்ரோல் விலை உயர்வுக்கு நூதனமாக எதிர்ப்பு தெரிவிக்கவே விஜய் சைக்கிளில் வந்ததாக ஒரு தரப்பு ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளது. பொதுமக்கள், ரசிகர்கள் அனைவரும் தேர்தலில் தவறாமல் வாக்கு செலுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் வந்ததாக அவரது ரசிகர் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்திய பிறகு சைக்கிளில் வீடு திரும்ப திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதிக அளவிலான ரசிகர்கள் குவிந்ததால், ரசிகர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் நடிகர் விஜய் வீடு திரும்பினார்.

Tags : Vijay ,Nilangara , Petrol price hike, Nilangarai, bicycle, actor Vijay, voting
× RELATED கட்சிக்காக நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க - Vijay Kumar Speech at Election Press meet | Dinkarannews