கூடூர், கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டையில் பராமரிப்பு புறநகர் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில், கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை  இடையே பராமரிப்பு   பணி  நடைபெறவுள்ளதால்,  புறநகர் சிறப்பு ரயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் எளாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை சென்ட்ரலிலிருந்து மதியம் 1.25 மற்றும் 3.15 மணிக்கு கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை சென்ட்ரலிலிருந்து மதியம் 2.35 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் பொன்னேரி வரை மட்டுமே இயக்கப்படும். வேளச்சேரியிலிருந்து மதியம் 1.55 மற்றும்  2.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் பொன்னேரி வரை மட்டுமே இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரலிலிருந்து மாலை 4.35 மணிக்கு கும்மமிடிபூண்டி வரை செல்லும் ரயில் பொன்னேரி வரை மட்டுமே இயக்கப்படும். கும்மிடிப்பூண்டியிலிருந்து மதியம் 3.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, மீஞ்சூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 4.30 மணிக்கு வேளச்சேரி வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி - பொன்னேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 5, 5.30 மற்றும் 6.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

ஏப்ரல் 7ம் தேதி முதல் 10 வரை முழுமையாக ரத்து: கும்மிடிப்பூண்டியிலிருந்து மதியம் 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில், சூலூர்பேட்டையிலிருந்து மதியம் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில், சூலூர்பேட்டையிலிருந்து மாலை 5.15 மணிக்கு வேளச்சேரி வரை செல்லும் ரயில் ஆகிய மூன்று ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக கும்மிடிப்பூண்டியிலிருந்து மதியம் 1.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை ஒரு பயணியர் சிறப்பு ரயிலும், எளாவூரிலிருந்து மதியம் 2.10 மணிக்கு சென்னை கடற்கரை வரை ஒரு பயணியர் சிறப்பு ரயிலும், பொன்னேரியில் இருந்து மாலை 4.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை ஒரு பயணியர் சிறப்பு  ரயிலும்  ஏப்ரல் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை தினசரி இயக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>