×

பிரபல இந்தி நடிகை அலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு..!

டெல்லி: இந்தி திரையுலகின் பிரபல நடிகை அலியா பட்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மும்பையில், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். அலியா, தனது இன்ஸ்டாகிராமில் நள்ளிரவில் வெளியிட்ட செய்தியில், அனைவருக்கும் வணக்கம். எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.  வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவேன். என்னுடைய மருத்துவர்கள் அறிவுரையின்படி அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags : Aliyah Pattu , Famous Hindi actress Alia Pattu is affected by corona ..!
× RELATED மோடி 3.0 அமைச்சரவை: அமித்ஷா முதல்...