×

தாம்பரம் முடிச்சூர் பகுதியில் டி.கே.எம்.சின்னையா பிரசாரம்

சென்னை: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா தாம்பரம் முடிச்சூர் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் வீடு வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், வரும் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அதிமுக அரசு சார்பில் செய்ய உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார். மக்கள் மத்தியில் டி.கே.எம்.சின்னையா பேசுகையில், ‘அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி அரிசி அட்டை குடும்பதாரர்களுக்கு ஒரு ஆண்டிற்கு விலையில்லாமல் 6 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.

இல்லத்தரசிகளின் வேலைகளை குறைப்பதற்காக விலையில்லா வாஷிங்மெஷின் வழங்கப்படும். ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். மாதம்தோறும் எல்லா அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,500 ரூபாய் வழங்கப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். 18 வயது நிரம்பியவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுநர் லைசென்ஸ் வழங்கப்படும். நடைபாதை வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். இந்த அனைத்து திட்டங்களையும் அதிமுக அரசு மீண்டும் அமைந்தவுடன் நிறைவேற்றப்படும்,’ என்றார். பிரசாரத்தின் போது அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : TKM ,Chinnaiya ,Tambaram Mudichur , TKM Chinnaiya campaign in Tambaram Mudichur area
× RELATED கூடுதல் மகசூல் தரும் ரகங்களை சம்பா, தாளடியில் பயிரிட வேண்டும்