மஞ்சுநாத் பிரசாத் மாற்றப்பட்டார் பெங்களூரு மாநகராட்சி ஆணையராக கவுரவ்குப்தா நியமனம்

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி ஆணையராக இருந்த மஞ்சுநாத் பிரசாத்தை மாற்றம் செய்துள்ள மாநில அரசு, தற்போது நிர்வாக அதிகாரியாக இருக்கும் கவுரவ்குப்தாவை ஆணையராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு மாநகரில் கடந்தாண்டு கொரோனா தொற்று அதிகம் பாதித்து வந்த சமயத்தில் மாநில வருவாய்துறை முதன்மை செயலாளராக இருந்த மஞ்சுநாத் பிரசாத்தை மாநகராட்சி ஆணையராக அரசு நியமனம் செய்தது. பதவி மூப்பு அடிப்படையில் உயர் பதவியில் இருந்த மஞ்சுநாத் பிரசாத் சிறப்பு சட்டம் மூலம் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். அவர் மேற்கொண்ட தீவிர முயற்சியால் தொற்று பரவல் குறைக்கப்பட்டது. இதனிடையில் மாநகராட்சியின் பதவி காலம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முடிந்தது.

தற்போது பெருநகர் மாநகராட்சியாக இருப்பதை கிரேட்டர் மாநகராட்சியாக தரம் உயர்த்த மாநில அரசு முடிவு செய்து, அதற்காக சட்ட திருத்த மசோதாவை பேரவை மற்றும் மேலவையில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றுள்ளது. புதிய சட்டத்தின் படி மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க காலதாமதமாகும் என்பதால் மாநில தொழில்துறை முதன்மை செயலாளராக இருக்கும் கவுரவ்குப்தாவை மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்தது. அவர் பணியில் இருந்தார். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்த ஆணையர் மஞ்சுநாத் பிரசாத்திற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தொற்று பாதித்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் பணிக்கு திரும்பினாலும் பழையபடி உற்சாகமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட முடியாமல் இருந்தார்.

தற்ேபாது கொரோனா இரண்டாவது அலை தொடங்கியுள்ளதால், அதை நிர்வாகம் செய்ய திறமையான ஆணையர் ேதவைப்படுகிறது. இந்நிலையில் மாநில வருவாய்துறை முதன்மை செயலாளராக இருந்த மகேந்திர ஜெயின், நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். காலியாகியுள்ள அந்த பதவிக்கு மஞ்சுநாத் பிரசாத்தை நியமனம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளதாகவும் தற்போது நிர்வாக அதிகாரியாக இருக்கும் கவுரவ்குப்தாவை ஆணையராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. அதை உறுதி செய்யும் வகையில் மாநில ஊழியர் நலம் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

மாநகராட்சி ஆணையராக இருந்த மஞ்சுநாத்பிரசாத்தை மாநில வருவாய்துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்துள்ளதுடன் கூடுதலாக பேரிடர் தடுப்பு பிரிவும் ஒப்படைத்துள்ளது. மேலும் தற்போது மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக இருக்கும் கவுரவ்குப்தாவை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல் நீர்பாசனதுறை ஏசிஎஸ் அதிகாரியாக இருக்கும் ராகேஷ்சிங்கை மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக நியமித்து கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>