×

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை மக்களுக்கு புதிய உற்சாகத்தையும், ஆற்றலையும் கொண்டுவரும்!: பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் புதிய ஆற்றலையும் கொண்டுவரும் என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்துக்களின் இந்த பண்டிகை இன்றும் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலுக்கு இடையே கடுமையான கட்டுப்பாடுகளுடன் மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் திருநாளான ஹோலி, ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய உற்சாகத்தையும் புதிய ஆற்றலையும் கொண்டு வந்து சேர்க்கும் என கூறியுள்ளார். இதனிடையே ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தொற்றுநோய், திருவிழாவை பாதிக்கும் என்றாலும் மக்கள் தங்கள் எதிர்காலத்தை இன்னும் அதிக நம்பிக்கையுடன் பார்க்க முடியும். பரந்த உலகுக்கு உதவும் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா ஒரு மிகப்பெரிய வேலை செய்து வருகிறது.

நண்பர் மோடி மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஹோலி வாழ்த்துக்கள் என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஹோலி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்கள். திருவிழா நம் நாட்டின் பன்முகத்தன்மையின் ஒவ்வொரு நிறத்தையும் குறிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கோலாகலமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : Holi ,Modi , Color, Holi, excitement, Prime Minister Modi
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!