×

கொரோனா பாதிப்பு குறையாததால் எல்.கே.சுதீஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: விஜயகாந்த்தின் மைத்துனரும், தேமுதிக துணை பொது செயலாளருமான எல்.கே.சுதீஷ், தேமுதிக, கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 20ம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று குறையவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் உள்ள கொரோனா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் எல்.கே.சுதீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தேமுதிகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Q. ,Sudeish , LK Sudeesh
× RELATED ரூ.8 லட்சம் மோசடி: பெண் காவலர் மீது வழக்கு