×

நில எடுப்புக்கான இழப்பீட்டு தொகையை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசு: சிபிசிஎல் நிறுவனத்திற்கு எஸ்டிபிஐ கண்டனம்

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாகை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கப் பணிக்காக பனங்குடி, கோபுராஜபுரம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் 620 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. ஆனால், நில எடுப்பில் மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டு தொகையை கடந்த 4 ஆண்டுகளாகியும் வழங்கவில்லை. இந்நிலையில் நரிமணம் பகுதியில் நிலங்களை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் மற்றும் வாகனங்களை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நிலங்களை கைப்பற்றி விட்டு, இழப்பீட்டு தொகையை வழங்காமல் இழுத்தடித்து வரும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. உடனடியாக கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை விடுதலை செய்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post நில எடுப்புக்கான இழப்பீட்டு தொகையை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசு: சிபிசிஎல் நிறுவனத்திற்கு எஸ்டிபிஐ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Union Govt ,STBI ,CBCL ,CHENNAI ,STPI ,President ,Nellie Mubarak ,Panangudi ,Gopurajapuram ,Nagai district ,Union government ,Dinakaran ,
× RELATED நாகை சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப்...