×

சொன்னாரே செஞ்சாரா?: திட்டங்களை நிறைவேறாத கனவாக்கிய எம்எல்ஏ: கிணத்துக்கடவு தொகுதி எம்எல்ஏ எட்டிமடை சண்முகம்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி 95 சதவீதம் கிராமங்கள் கொண்ட பகுதியாகும். இந்த தொகுதியின் எம்எல்ஏவாக எட்டிமடை சண்முகம் உள்ளார்.  ெதாகுதியை எட்டிப்பார்க்காத சண்முகம்  என பெயர் எடுத்த இவர் மீது எழுந்த புகாரின் பேரில் இவருக்கு தற்போதைய  தேர்தலில் சீட் வழங்கவில்லை. அமைச்சர் வேலுமணியின் தீவிர ஆதரவாளராக  இருந்ததை தவிர இவர் எந்த வேலையும் செய்யவில்லை.
மதுக்கரை, நீலம்பூர் பைபாஸ் ரோடு, இரு மாநில எல்லை ரோடுகள், விவசாய நிலங்கள், கணிசமான ெதாழில் நிறுவனங்கள் ெகாண்ட இந்த தொகுதிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை.

70 சதவீத கிராம குடியிருப்புகளுக்கு தரமான குடிநீர் வழங்கப்படவில்லை. செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி, கிணத்துக்கடவு, மைலேரிபாளையம், ஒத்தக்கால் மண்டபம், எட்டிமடை, கந்தே கவுண்டன் சாவடி, நவக்கரை, மாவுத்தம்பதி உட்பட 80க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. பாலத்துறை, திருமலையம்பாளையம், நாச்சிபாளையம், கண்ணம்பாளையம், வழுக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்கு, சாக்கடை என அடிப்படை வசதிகள் நிறைவேறாமல் இருக்கிறது. 30 ஆண்டிற்கு மேலாக மாற்றங்கள் இல்லாமல் பட்டிக்காடாக கிடப்பதாக மக்கள் புலம்பி வருகின்றனர். தொகுதி வளர்ச்சி நிதியிலும் இங்கே திட்ட பணிகள் நடக்கவில்லை.

கிணத்துக்கடவு ெபாதுமக்கள் கூறுகையில், ‘‘மதுக்கரை வாளையார், வேலந்தாவளம், சொக்கனூர் செக்போஸ்ட் வழியாக கேரளாவிற்கு கடத்தல் நடக்கிறது. கல் குவாரி, கிரசர்களில் விதிமுறை மீறல் நடப்பதை எம்எல்ஏ கண்டுகொள்ளவில்லை. கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்த்த எந்த  திட்டமும் கொண்டு வரவில்லை. மதுக்கரை, கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள ஓடைகளின் தண்ணீர் எல்லாம் கேரளாவிற்கு செல்கிறது. இதை தடுக்க இவர் தடுப்பணை கட்ட முன் வரவில்லை.

60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி கிடையாது. கிணத்துகடவு பகுதியில் தொழில் பேட்டை அமைக்கும் திட்டம் 10 ஆண்டாக இழுபறியில் இருக்கிறது. மலுமிச்சம்பட்டி, சிட்கோ தொழில் பேட்டை மேம்படுத்தப்படவில்லை. நீலம்பூர் பைபாஸ் ரோட்டில் பஸ் வசதி 22 ஆண்டாக செய்து தரவில்லை. எம்எல்ஏவிடம் எந்த கோரிக்கை சொன்னாலும் அதை நிறைவேற்ற மாட்டார். அவரால் அவர் இருக்கும் பகுதியில் கூட அடிப்படை வசதியை நிறைவேற்றி தர முடியவில்லை’’ என்றனர்.

தொண்டாமுத்தூரை விட அதிக திட்டப்பணிகள்

எட்டிமடை சண்முகம் எம்எல்ஏ கூறுகையில், ‘‘தொகுதியில் 5 ஆண்டில் 800 கோடி ரூபாய்க்கு திட்டப்பணிகள் நடந்துள்ளது. வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி 178 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. 4 இடத்தில் மருத்துவமனை கட்டப்பட்டது. வேலந்தாவளம் ரோடு 19 ேகாடி ரூபாய் ெசலவிலும், பல்லடம் ரோடு விரிவாக்க பணியும் நடத்தப்பட்டது. மாநில எல்லை செக்போஸ்ட் ரோடுகள் சீரமைக்கப்பட்டது. 7 பேரூராட்சிகளில் 20க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சுமார் 400 கோடி ரூபாய்க்கு நடக்கிறது. தொண்டாமுத்தூர் தொகுதியை விட என் தொகுதியில் தான் அதிக திட்ட பணிகளை நடத்தி காட்டியிருக்கிறேன். வேறு யாரும் என்னை போல் தொகுதியில் திட்டப்பணிகள் செய்யவில்லை’’ என்றார்.

‘திட்டங்கள் எதையும் செய்யாமல் அலட்சியம்’

மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கூறுகையில், ‘‘குறிச்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய குழிகளை மூடவில்லை. ஆழியாறு, சிறுவாணி குடிநீர் சப்ளை வெகுவாக முடங்கிவிட்டது. 18 நாளுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. கிராமங்களுக்கு சென்று வந்த மினி பஸ்களை நிறுத்தி விட்டார்கள். பல கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யவில்லை. இத்தொகுதியில் உள்ள கிராமங்கள், கடந்த 10 ஆண்டிற்கு முன்பு இருந்ததைவிட தற்போது படுமோசமான நிலையில் உள்ளன. சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள ஆலைகளின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் பெரிய திட்டங்கள் எதையும் செய்யாமல், அலட்சியமாக விட்டுவிட்டார்’’ என்றார்.

கொடி கட்டுனதுக்கு வழக்கு போட்டுட்டாங்கப்பா

தேர்தல் பிரசாரத்துல, கொடி கட்டுறதுல இருந்து, பிரியாணி போடுறது, பணப்பட்டுவாடா நடக்குதான்னு எல்லாத்தையும் தேர்தல் கமிஷன் உத்து கவனிச்சிட்டு வர்றாங்க. இதுல வாணியம்பாடி இலைகட்சியைச் சேர்ந்த வேட்பாளரு செந்தில்குமாரு, நேற்று வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையத்துல வாக்கு சேகரிக்கிறதுக்காக அந்த ஏரியா பக்கமா போனாறாம். இதனால அந்த ஏரியாவுல தடபுடலா கொடியெல்லாம் கட்டுனாங்களாம். கொடி கட்டுனதுல விதிமீறல் இருக்குதுன்னு சொல்லி, கொடி கட்டுன தொழிலாளி மேல கேஸ் போட்டுட்டாங்களாம். ஆனால் அம்ப புடிச்சு கேஸ் போட்டிருக்கீங்களே சார், வில்ல விட்டுட்டிங்களேன்னு ஏரியா தொழிலாளிங்க புலம்புறாங்களாம். தேர்தல் கமிஷனுக்கு இவங்க புலம்பல் கேக்குமா?

Tags : Senchara ,MLA , ADMK
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...