×

இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை: இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட 4  மீனவர்களின் குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டுள்ளது.
மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பு தலைவர் பீட்டர் ராயன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த ஜனவரி 18ம் தேதி கச்சத்தீவு பகுதியில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த  மெசைய்யா, நாகராஜ், சாம், செந்தில் குமார் ஆகியோர் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, சர்வதேச கடல் எல்லையை தாண்டி அத்துமீறி வந்த இலங்கை கடற்படையினர், மீன்பிடி படகு மீது மோதி, படகை கடலில் மூழ்கடித்தனர்.

இதனால் கடலில் மூழ்கி பலியான 4 மீனவர்களின் குடும்பங்களுக்கும் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும்,  அவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இந்த சம்பவம் தொடர்பாக, ஆள் மாயம் என  வழக்குப்பதிவு செய்த திருப்புன்னவாசல் போலீசார், இலங்கை கடற்படையினருக்கு எதிராக மீது எந்த குற்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.  இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில், திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.



Tags : Sri Lankan Navy , Case seeking compensation for the families of 4 fishermen killed by the Sri Lankan Navy: Trial tomorrow in iCourt
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!