×

சித்தூர் அரசு மருத்துவமனையில் அவலம் கழிவுநீர் பைப்புகளில் இருந்து நீர் கசிவால் சுகாதாரம் பாதிப்பு-நோயாளிகள் துர்நாற்றத்தால் அவதி

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் சித்தூர் அரசு மருத்துவமனை முதன்மை அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. சித்தூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான ஏழை எளிய மக்கள் நாள்தோறும் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு தங்களின் நோய்களுக்காக சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக வருகின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் மூன்று தளம் அமைந்துள்ளது.

ஒவ்வொரு தளத்திலும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் கழிவறைக்கு செல்ல வேண்டுமென்றால் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். ஏனென்றால் மேல் தளத்திலிருந்து அடித்தளம் கழிவறைகளில் பைப்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைப்களில் இருந்து நீர் கசிவு ஏற்படுவதால் அதில் வரும் துர்நாற்றத்தால் நோயாளிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.  அதுமட்டுமல்லாமல் மாலை நேரங்களில் கொசுக்களின் தொல்லையால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து நோயாளிகள் மருத்துவமனை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் மருத்துவத்துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். ஏராளமான நோயாளிகள் இங்குள்ள கழிவறையை பயன்படுத்த முடியாமல் வெளியே உள்ள தனியார் கழிவறைக்குச் சென்று கட்டணம் செலுத்தி கழிவறை பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இனியாவது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த கழிவறை பைப்களை சீரமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Chittoor Government Hospital , Chittoor: Chittoor Government Hospital is functioning as the primary government hospital in Chittoor district. From Chittoor district
× RELATED உலக செவிலியர் தினத்தையொட்டி அரசு...