×

உலக செவிலியர் தினத்தையொட்டி அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு பாராட்டு விழா-ஏராளமானோர் பங்கேற்பு

சித்தூர் :  உலக செவிலியர் தினத்தையொட்டி சித்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். சித்தூர் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. முதன்மை செவிலியர் வரலட்சுமி பாய், முதன்மை மருத்துவர் நாயக் ஆகியோர் செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து கூறி பரிசு வழங்கினர்.இதையடுத்து முதன்மை செவிலியர் வரலட்சுமி கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12ம் தேதி உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இங்கிலாந்து  நாட்டைச் சேர்ந்த புளோரன்ஸ்சி நைட்டிங்கேல் என்பவர் 1820ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி பிறந்தார். இவர் அவருடைய தந்தையுடன் இங்கிலாந்து நாட்டை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது ஏராளமான ராணுவ வீரர்கள் போரில் காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் தனது இளம் வயதில் செவிலியர் படிப்பு முடித்து, செவிலியராக பணிபுரிந்தார். அவர் ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தார். அதேபோல் ஏழை எளிய மக்களுக்கு மற்றும் முதியோர்களுக்கு உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தார். அவருடைய சிறந்த சேவையை இங்கிலாந்து அரசு அவரை வெகுவாக பாராட்டியது. பின்னர் 1910ம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். பின்னர் அவருடைய மறைவுக்குப் பிறகு இங்கிலாந்து அரசு 1965ம் ஆண்டு புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினத்தை உலக செவிலியர் தினமாக கொண்டாடியது. அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள செவிலியர்கள் செவிலியர் தினத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். அதேபோல் நம் இந்திய அரசும் செவிலியர்கள் தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறது. மருத்துவர்கள் கடவுள் என்றால், செவிலியர்கள் கடவுளின் தூதர்கள், செவிலியர்கள்  தனது குடும்பத்தில் உள்ள வரை விட நோயாளிகளை அரவணைத்து நன்றாக கவனித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.கொரோனா வைரஸ் தொற்று பரவலின்போது சித்தூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் உயிரையும் பொருட்படுத்தாமல், சிறந்து முறையில் சிகிச்சை அளித்தனர். அதில் ஒரு சிலர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். தற்போது சித்தூர் அரசு மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மேலும், மருத்துவமனயில் சிகிச்சை பெற்று செல்லும் நோயாளிகள் செவிலியர்களிடம், நீங்கள் சிறப்பான சிகிச்சை அளித்ததால் நாங்கள் உயிரிபிழைத்திருக்கிறோம் என்று கண்ணீர் மல்க சொல்லும்போது நாங்கள் பெரும் பாக்கியம் பெற்று மகிழ்ச்சியடைகிறோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு ஏராளமான செவிலியர்கள் செவிலியர் தின உறுதிமொழி ஏற்றனர்….

The post உலக செவிலியர் தினத்தையொட்டி அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு பாராட்டு விழா-ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : World Nurses Day ,Chittoor ,International Nurses Day ,Chittoor Government Hospital ,Chittoor… ,Government Hospital ,Dinakaran ,
× RELATED நடைபெற உள்ள பொதுத்தேர்தலில்...