×

26 கோடி மோசடி செய்த விவகாரம்: சிலை கடத்தல் கும்பலுடன் இசையமைப்பாளர் அம்ரிஷுக்கு நேரடி தொடர்பு? 5 நாள் காவலில் எடுக்க முடிவு

சென்னை: சென்னை போயஸ் கார்டன் பொன்னி தெருவை சேர்ந்தவர் ஜெயசித்ரா. பழம்பெரும் நடிகையான இவரது மகன் அம்ரிஷ் (32). திரைப்பட  இசையமைப்பாளரான அம்ரிஷ், மொட்ட சிவா கெட்ட சிவா, சார்லி சாப்ளின்-2 உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். திரைப்படம்  ஒன்றில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.  இவர் கடந்த கடந்த 2013ல் தொழில் வளர்ச்சி அடையும் என்று கூறி, சென்னை வளசரவாக்கம் ஜானகி  தெருவை சேர்ந்த தொழிலதிபர் நெடுமாறன் (68) என்பவருக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து நெடுமாறனிடம் போலி இரிடியத்தை ரூ.26.20 கோடிக்கு  விற்பனை செய்துள்ளார்.  இதை பரிசோதனை செய்த வெளிநாட்டினர், இது போலியானது என்றும், இதில் இரிடியம் 1 விழுக்காடு கூட இல்லை என்றும்  கூறிவிட்டு ெசன்றுவிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் ெநடுமாறன் சம்பவம் குறித்து அம்ரிஷியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முறையாக பதில் அளிக்க  வில்லை. எனவே, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசாா விசாரணை நடத்தினர்.  அதில், இசையமைப்பாளர் அம்ரிஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து போலியாக இரிடியம் கலந்த கலசத்தை தயாரித்து அதை தொழிலதிபரிடம் ஏமாற்றி  ரூ.26.20 கோடிக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை அம்ரிஷியை  கைது செய்தனர். விசாரணையில், தமிழகத்தில் சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு கிராமப்புறங்களில் மிகவும் பழமைவாய்ந்த  கோயில்களை நோட்டமிட்டு கலசங்களை திருடி வந்தது தெரியவந்தது.

திருடிய கலசத்தை அம்ரிஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆன்மிகத்தில் அதீத நம்பிக்கை வைத்துள்ள சினிமா பைனான்சியர், தொழிலதிபர்களை  அணுகி பல கோடிக்கு விற்பனை செய்து மோசடி செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனவே, இந்த  மோசடியில் சினிமா பிரபலங்கள் பலர் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கைது செய்யப்பட்ட இசையமைப்பாளர் அம்ரிஷியை 5  நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளிலும் தற்போது  ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Amrish , 26 crore scam: Music composer Amrish directly involved in idol smuggling gang? Decided to take into custody for 5 days
× RELATED போலி ‘ரைஸ் புல்லிங்’ கொடுத்து...