×

பொள்ளாச்சி ஜெயராமன் சொத்து மதிப்பு ரூ.33 கோடி: மனைவிகள் பெயரில் தலா ₹12 கோடி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர்   பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று, தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சொத்து பட்டியல்: பொள்ளாச்சி ஜெயராமன்  பெயரில் அசையும் சொத்தாக ரூ.4 கோடியே 62 லட்சத்து 94 ஆயிரத்து 179ம், அசையா சொத்தாக ரூ.5 கோடியே 25 ஆயிரமும் என மொத்தம் ரூ.9 கோடியே 63 லட்சத்து 19 ஆயிரத்து 179ஆக உள்ளது. வங்கி கடனாக ரூ.67 லட்சத்து 95 ஆயிரத்து 907ம் உள்ளது. இவரது மனைவி பாக்கியலட்சுமி பெயரில் அசையும் சொத்தாக ரூ.1 கோடியே 21 லட்சத்து 3 ஆயிரத்து 391ம், அசையா சொத்தாக ரூ.11 கோடியே 74 லட்சமும். வங்கி கடனாக ரூ.63 லட்சத்து 16 ஆயிரத்து 921ம் உள்ளது.

இவரது மற்றொரு மனைவி ஜோதிலட்சுமி பெயரில் அசையும் சொத்தாக ரூ.1 கோடியே 8 லட்சத்து 63 ஆயிரத்து 469ம், அசையா சொத்தாக ரூ.11 கோடியே 75 லட்சமும், வங்கி கடனாக ரூ.63 லட்சத்து 16 ஆயிரத்து 921ம் உள்ளது.
இவரது மகன் பிரவின் பெயரில் அசையும் சொத்தாக ரூ.50 ஆயிரமும், அசையா சொத்தாக ரூ.64 லட்சத்து 54 ஆயிரமும், வங்கி கடன் ரூ.55 லட்சத்து 31 ஆயிரத்து 896ம் உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த  2016 தேர்தலில் பொள்ளாச்சி ஜெயராமன் வேட்பு மனுவில், தனது பெயரிலும், 2 மனைவிகள், மகன் பெயரிலும் மொத்தம் ரூ.21 கோடி சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்திருந்தார். இப்போது ரூ.12 கோடி கூடியுள்ளது.


Tags : Pollachi ,Jayaraman , Pollachi Jayaraman, property value, .33 crore, per capita, 12 crore
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!