×

19 மாநிலங்களில் கொரோனா ஏறுமுகம் தமிழகத்திலும் வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது

* ஊரடங்கு அமல் என்ற வதந்திகளை நம்பாதீர்கள்
* வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூட்டங்கள் நடத்தலாம்
* பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்
* சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: இந்தியாவில் 19 மாநிலங்களில் கொரோனா தற்போது ஏறுமுகமாக உள்ளது. அதில் தமிழகம் உள்ளது என்பது தான் உண்மையான நிலை. எனினும் ஊரடங்கு அமல் என்ற வதந்திகளை நம்பாதீர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ேநற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது டீன் தேரணிராஜன் மற்றும் டாக்டர்கள் பலர் உடனிருந்தனர்.  பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தலைமை செயலாளர் நேற்று கொரோனா பரவல் தடுப்பு குறித்து விரிவான அறிக்கை தயார் செய்ய உத்தரவை பிறப்பித்துள்ளார். நாட்டில், 19 மாநிலங்களில் கொரோனா தற்போது ஏறுமுகமாக உள்ளது. அதில் தமிழகமும் உள்ளது என்பது தான் உண்மையான நிலை. ஏற்கனவே ஒரு நாளைக்கு 7 ஆயிரம் பேர் வரை சிகிச்சை அளித்துள்ளோம். அதை ஒப்பிடும் ேபாது தற்ேபாது ஆயிரத்துக்குள் தான் இருக்கிறது.  

ராயபுரம், திருவிக நகரில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது. அபராதம் விதித்தால் தான் மக்கள் முகக்கவசம் அணிகின்றனர். கடந்த மூன்று நாட்களில் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசியல் கட்சி கூட்டங்களில் தொண்டர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். தேனாம்பேட்டை, அண்ணாநகர், அம்பத்தூர், வளசரவாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. லாக்டவுன் வர வாய்ப்புள்ளதா என்று நாங்கள் கூற முடியாது. வதந்திகளை நம்ப வேண்டாம். நோய் ஏறுமுகமாக உள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.  

அரசு கைவசம் 20 லட்சம் ‘டோஸ்’
செயலாளர் ராதாகிருஷ்ணன் மேலும் கூறுகையில், பொதுமக்கள் தடுப்பூசி கண்டிப்பாக போட  வேண்டும். இதுவரை 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 3  ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. முதியவர்கள்  மட்டுமின்றி, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி  போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் மத்திய அரசிடம் 60 வயது என்பதை 50 வயதாகவும், இணைநோய் உள்ளவர்கள் அனைவருக்கும் ேபாட வேண்டும் என்று மத்திய அரசிடம் கூறியுள்ளோம். நம்மிடம் 20 லட்சம் டோஸ் வரை உள்ளது என்றார்.

தொற்று வேகமாக பரவ வாய்ப்பு
சுகாதாரத்துறை செயலாளர் கூறுகையில், கொரோனா ஆர்டிபிசிஆர் சோதனையை அதிகரிக்க  சொல்லியுள்ளோம். தற்போது ஆயிரம் வரை வருகிறது. அது இன்னமும் அதிகரிக்க  வாய்ப்புள்ளது. அதை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும். வீட்டில் தனிமை  படுத்திக் கொள்பவர்கள் யாரும் இல்லாத நேரத்தில் வெளியில் சென்று  மற்றவர்களுக்கு பரப்பி விடுகின்றனர். கொரோனா தொற்று சாவாலாக உள்ள  மாவட்டம், சென்னை, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருப்பூர் போன்ற மாவட்டங்களில் தான் அதிகம் உள்ளது. கூட்டங்களில் கலந்து  கொள்பவர்கள் முகக்கவவசம் அணிவதில்லை. கூட்டங்கள் நடத்தக்கூடாது என்பது  இல்லை முகக்கவசம் அணிந்து முறையான வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும்  என்பது தான் எங்களுடைய வேண்டுகோள்.நோய் வரும் போது அதை தடுக்க கூடிய வழிமுறைகளை தான் செய்கிறோம்’ என்றார்.

மறக்க முடியாத மார்ச் 2020
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, நாட்டில் தற்ேபாது 19 மாநிலங்களில் தொற்று அதிகமாக  உள்ளது. கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் எப்படி கொரோனா வைரஸ் வேகமாக பரவியதோ அதைப்போன்று படிப்படியாக பரவுகிறது. ஆனால் கடந்த முறையை விட இந்த முறை தடுப்பு மருந்துகள் நிறைய  வழிமுறைகள் உள்ளது. எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Tags : Tamil Nadu , In 19 states, Corona and Tamil Nadu have also increased
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...