×

காயல்பட்டினத்தில் சிறப்பு தொழுகை-திரளானோர் பங்கேற்பு

ஆறுமுகநேரி : காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீபின் 94ம் ஆண்டு நிகழ்ச்சிகள் கடந்த 13ம் தேதி  திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது. ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 9.00 மணிக்கு  அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவதும், நிறைவு நாளன்று சிறப்பு  பிரார்த்தனை செய்யப்படும்.  

நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.  நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, பெரிய குத்பா பள்ளி கத்தீப் மவ்லவீ அஹ்மத் அப்துல் காதிர்  பேசினார். கூட்டு  பிரார்த்தனை பற்றி  மவ்லவீ காஜா முஹ்யித்தீன் பேசினார். தமிழ்நாடு ஜமாஅத்துல் சபையின் தலைவர் காஜா முஹ்யித்தீன் பாக்கவீ சிறப்புரையாற்றினார். முஹம்மத் இஸ்மாஈல் புகாரி நிகழ்ச்சி அறிமுக உரையாற்றினார்.

சமூக ஒற்றுமை, உலக அமைதி, மத நல்லிணக்கம், மனிதநேயம், சகோதரத்துவம், நாட்டு நலன்,   உலக நலன் வேண்டி  சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. பிரார்த்தனையில்  உள்ளூர், வெளியூர்களிலிருந்தும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்கில்  கலந்துகொண்டனர்.

 நிகழ்ச்சியில்  காயல்பட்டினம் பள்ளிவாசல் ஜமாஅத்துகளின் நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பீ. மீராசா மரைக்காயர், செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், நகர பொருளாளர் கே.எம்.டீ. சுலைமான் லெப்பை, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், அதன் செயலாளர் வாவு எம்.எம்.முதஸிம், இணைச் செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் உட்பட - நகர பொதுமக்களும், வெளியூர்களை சேர்ந்த பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூர் தொகுதி வேட்பாளரும்,  தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பிரார்த்தனையில் பங்கேற்றனர்.

அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் மஜ்லிஸுல் புகாரி ஷரீப் தலைவர் முஹம்மத் சாலிஹ் ஆலிம், துணைத்தலைவர் சாலிஹ், மேலாளர் முஹம்மத் அலீ ஸாஹிப், இணைச் செயலாளர்களான முஹம்மத் இஸ்மாயில், ஹபீபுர் ரஹ்மான்,  குளம் மூஸா நெய்னா, துணைச் செயலாளர் செய்யித் இப்ராகிம் ஆகிய நிர்வாகிகளும், முஹம்மத் இஸ்மாயில், நூஹ் ஸாஹிப், குளம் முஹம்மத்தம்பி உள்ளிட்ட வைபவ கமிட்டியினரும் செய்திருந்தனர்.

Tags : Kayalpattinam , Arumuganeri: Kayalpattinam Majlisul Bukarish Sharif's 94th year program started on the 13th with Tikr Majlis. Throughout the month of Rajab
× RELATED காயல்பட்டினத்தில் பட்டப்பகலில்...