×

ஜேஎன்யூ தேசதுரோக வழக்கு: ககன்யாகுமாருக்கு குற்றப்பத்திரிகை நகல்: போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி; தேசதுரோக வழக்கில் ஜேஎன்யூ முன்னாள் மாணவர் சங்க தலைவர் ககன்யாகுமாருக்கு குற்றப்பத்திரிகை நகலை வழங்கும்படி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவராக இருந்தவர் ககன்யாகுமார். பல்கலை வளாகத்தில் 2016ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேி நடந்த கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியதாக கூறி இவர் மற்றும் உமர்காலித் மற்றும் 8 பேர் மீது போலீசில் புகார் கூறப்பட்டது. 2016 பிப்ரவரி 11ம் தேதி பா.ஜ எம்பி மகேஷ்கிரி மற்றும் ஆர்எஸ்எஸ் மாணவர்அமைப்பான அகிலபாரதீய வித்தியாபரிசத் சார்பில் அளித்த புகாரின்படி போலீசார் 124ஏ(தேசதுரோக வழக்கு), 323(பிறர்மனதை புண்படுத்துதல்), 471(போலி ஆவணம் தயார் செய்தல்) 149( சட்டவிரோதமாக கூடுதல்), 147( கலவரத்தை தூண்டுதல்), 120பி(குற்றசந்தேகம்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2019 ஜனவரி 14ம் தேதி டெல்லி சிறப்பு காவல் போலீசார் 1200 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் ககன்யாகுமர், உமர்காலித், அனிர்பன் பட்டாச்சாரியா மற்றும் 7 பேர் மீது போலீசார் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் பங்கஜ் சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ககன்யாகுமார், உமர்காலித் மற்றும் 9 பேருக்கு குற்றப்பத்திரிகை நகலை வழங்கும்படி போலீசாருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
மேலும் போலீசார் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி ஏப்ரல் 7ம் தேதி நடக்கும் என்றும் அவர் அறிவித்தார். அதை தொடர்ந்து இந்த வழக்கில் ஜாமீன் கேட்ட காஷ்மீரை சேர்ந்த அக்யூப், முஜிப், உமல்குல், ரியாஸ் ரசூல், பாஷ்ரத் அலி, காலித் பஷீர் ஆகிய 7 பேருக்கும் அவர் ரூ.25 ஆயிரம் தனிநபர் பத்திரம் அடிப்படையில் ஜாமீன்வழங்கி உத்தவிட்டார்.

Tags : JNU ,Kaganyakumar , JNU, treason case, court, order
× RELATED உலக தரவரிசை வெளியீடு இந்தியாவின் சிறந்த பல்கலை. ஜேஎன்யு