×

உலக தரவரிசை வெளியீடு இந்தியாவின் சிறந்த பல்கலை. ஜேஎன்யு

புதுடெல்லி: லண்டனைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் ஆய்வு நிறுவனமான க்யூஎஸ் ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளின் கீழ் உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெவலப்மென்ட் படிப்புகளுக்கான உலக தரவரிசைப் பட்டியலில் ஜேஎன்யு 20வது இடத்தை பிடித்துள்ளது.

ஐஐஎம் அகமதாபாத் வணிகம் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கான உலக தரவரிசையில் முதல் 25 கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. ஐஐஎம் பெங்களூர், ஐஐஎம் கொல்கத்தா ஆகியவை முதல் 50 இடங்களுக்குள் உள்ளன. பல் மருத்து படிப்பில் சென்னையை சேர்ந்த சவீதா கல்லூரி 24வது இடத்தை பிடித்துள்ளது.

The post உலக தரவரிசை வெளியீடு இந்தியாவின் சிறந்த பல்கலை. ஜேஎன்யு appeared first on Dinakaran.

Tags : Publication ,India ,JNU ,New Delhi ,London ,QS ,Jawagarlal Nehru University ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!