×

இம்மாத இறுதிக்குள் அமெரிக்க மக்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் : அதிபர் ஜோபைடன் அறிவிப்பு!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோபைடனின் 138 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கொரோனா நிவாரண மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்படைந்தது. கொரோனாவால் ஏராளமான அமெரிக்கர்களும் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்க 138 லட்சம் கோடி ரூபாய் செலவிடுவதற்கான திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொண்டுவந்தார். இதற்கான கொரோனா நிவாரண மசோதா நீண்ட இழுபறிக்கு பின்னர் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து மசோதாவை சட்டமாக அங்கீகரிககும் கோப்புகளில் அதிபர் ஜோ பைடன் இன்று கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளார் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள கொரோனா நிவாரண மசோதாவில் 85% குடும்பங்கள் பயன்பெறும் என்று பைடன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் கொரோனா தடுப்பூசி வாங்கும் பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்ட்ரி, இம்மாத இறுதிக்குள் கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த அமெரிக்க மக்களுக்கு தலா 1,400 டாலர் (சுமார் ரூ.1 லட்சம்) வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் ஜோபைடன் தெரிவித்துள்ளார். .


Tags : President Jobidan , ஜோ பைடன்
× RELATED காபூல் விமான நிலையத்தில் இருக்கும்...