×

ராஜபாளையம் மக்களுக்குத் தனது சேவை தொடரும் : பாஜகவைச் சேர்ந்த கவுதமி ட்வீட்

ராஜபாளையம் : ராஜபாளையம் தொகுதி தங்களுடைய கட்சிக்குக் கிடைக்கவில்லை என்றாலும், தொகுதி மக்களுக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என்று கவுதமி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னைப் பாவித்துக் கடந்த 5 மாதங்களாக தங்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள். என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்குத் தலைவணங்கி, உங்களுக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன். உங்கள் அன்பின் வாயிலாகக் கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன்

இவ்வாறு கவுதமி தெரிவித்துள்ளார்.

Tags : Rajasthan ,Gavatami ,Bhajagawa , ராஜபாளையம்
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...