×

இன்ஜினில் புகை வந்ததால் தர்மபுரி அருகே நடுவழியில் நின்ற குர்லா எக்ஸ்பிரஸ்: மாற்று இன்ஜின் பொருத்தி இயக்கம்

தர்மபுரி: தர்மபுரி அருகே குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்றது. மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு, ஒருமணிநேரம் கழித்து மீண்டும் புறப்பட்டு சென்றது. கோவையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த லோக்மானிய திலக் வரை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் நேற்று பிற்பகல் 1.20 மணிக்கு தர்மபுரி மாவட்டம் சிவாடி ரயில் நிலையத்தை கடந்து, தர்மபுரி ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒட்டப்பட்டி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வந்தபோது, ரயில் என்ஜினில் பழுது ஏற்பட்டு புகை வந்தது. உடனே ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர், தர்மபுரி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் என்ஜின் வரவழைக்கப்பட்டு குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பொருத்தப்பட்டது.மீண்டும் 2.20 மணிக்கு ரயில் கிளம்பிச் சென்றது. திடீரென ஏற்பட்ட என்ஜின் பழுதால் ஒருமணிநேரம் வழியில் நின்று செல்லும் சூழல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் நடுவழியில் தவித்தனர்.

Tags : Dharmapuri , Kurla Express halted near Dharmapuri due to engine smoke: Alternative engine fitting operation
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்