×

புனவாசலில் பட்டுப்புழு வளர்ப்பு பண்ணையில் மாணவிகள் களப்பணி

திருவையாறு : திருவையாறு அடுத்த புனவாசல் கிராமத்தில் நாகராஜ் என்பவர் பட்டுப்புழு வளர்ப்பு பண்ணை வைத்துள்ளார்.
இந்த பண்ணையில் செங்கிப்பட்டி வேளாண் கல்லூரி மாணவிகள் 13 பேர் ஊரக வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவதற்காக பட்டுப்புழு வளர்ப்பு பண்ணையில் களப்பணி மேற்கொண்டனர்.

களப்பணியில் பட்டுப்பூச்சி வளர்ச்சியின் பருவநிலை, முட்டை, புழு, பூச்சி, கூடுகட்டுதல் பற்றியும் பட்டு நூல் எடுப்பது பற்றியும் பட்டுப்பூச்சிக்கான உணவு வகைள், மல்பெறி இலையை உணவாக சாப்பிட்டு அதன் வளர்ச்சி நிலைப்பற்றியும், விளக்கமாக கேட்டறிந்தனர்.

Tags : Punavasal , Thiruvaiyaru: Nagaraj owns a silkworm farm in Punavasal village next to Thiruvaiyaru.
× RELATED எடப்பாடியின் முத்தான 3 துரோகங்கள்: பட்டியல் போடும் ஓபிஎஸ்