கந்துவட்டி கொடுமையால் என்எல்சி தொழிலாளி தற்கொலை

நெய்வேலி: நெய்வேலி வட்டம் 13ல் உள்ள என்எல்சி குடியிருப்பில் வசித்தவர் முருகேசன் (50). இவர் என்எல்சி நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டின் அருகில் உள்ள ஷெட்டின்  மேற்கூரையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது பேண்ட் பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதில்  ‘முருகேசன் ஆகிய நான் எழுதியது, கந்துவட்டி கோரப்பிடியில் நான் ஒன்பது பேரிடம் பணம் வாங்கி   உள்ளேன்’ என எழுதி இருந்தது. இதுகுறித்து முருகேசன்  மனைவி  இந்திராணி புகாரின்படி நெய்வேலி ெதர்மல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். முருகேசன் மகளுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில் கந்து வட்டி கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் என்எல்சி தொழிலாளர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நெய்வேலி நகரில் கந்து வட்டி  கும்பலிடம் கடன் வாங்கும் என்எல்சி தொழிலாளர்கள்  சம்பளத்தை வட்டிக்கே கட்ட வேண்டி இருப்பதால் குடும்பத்துடன்  தற்கொலை செய்யும் நிலைமை  ஏற்படுகிறது. எனவே  கந்துவட்டி கும்பல் மீதும், அதற்கு  உடந்தையாக இருக்கும் காவல்துறையினர் மீதும் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories:

More