×

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1 லட்சம் நிதி வழங்கினார் டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன்

சென்னை: தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக  டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் ரூ.1 லட்சம் நிதி வழங்கியுள்ளார். தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி மூலமாகவோ நிவாரண உதவி வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். தையடுத்து பல்வேறு திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த தொகையை நிவாரணமாக வழங்கி வருகின்றனர். 
அந்த வகையில் அர்ஜுனா விருது சென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரன், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட சத்யன் ஞானசேகரன் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் ரூ.1 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

The post தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.1 லட்சம் நிதி வழங்கினார் டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் appeared first on Dinakaran.

Tags : Sathyan Gnanasekaran ,Tamil Nadu government ,Chennai ,Dinakaran ,
× RELATED கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு...