×

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் 2வது முறை நிரம்பியது சோத்துப்பாறை அணை: பாசன விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம்: பெரியகுளம் அருகே, 126.28 அடி உயர சோத்துப்பாறை அணை உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், இந்த அணை கடந்த 11ம் தேதிக்கு முன் தனது முழு கொள்ளவை எட்டியது. இந்நிலையில், கடந்த 11ம் தேதி பிற்பகல் பொதுப்பணித்துறையினர் அணையில் உள்ள நீர் திறக்கும் ஷட்டரை இயக்கி பார்த்தபோது, ஷட்டர் பழுதாகி பாதியில் நின்றது. இதனால், அணையில் நீர்திறப்பு அதிகரித்து வினாடிக்கு 400 கனஅடி நீர் வெளியேறியது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் அணையின் ஷட்டரை மூடும் முயற்சி தோல்வியடைந்ததால், அணையின் அவசர கால ஷட்டரை இயக்கி, அணையிலிருந்து வெளியேறும் நீரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது இரவாகி மழை பெய்ததால் பணிகள் தடைபட்டன. மேலும், அணைப்பகுதியில் மின்சாரம் தடைபட்டதால், அவசரகால ஷட்டரை இயக்க முடியாத நிலையில், கனரக ஜெனரேட்டர்கள் மூலம் இரவு 2 மணிக்கு மேல், அவசரகால சட்டரை இயக்கினர். பாதி அளவு நீரை தடுத்த நிலையில், முதன்மை சட்டர் பழுது நீக்கும் பணியில் 8 மணி நேரமாக நடைபெற்றது. அணையின் ஷட்டர் பழுதாகி நின்ற 15 மணி நேரத்தில் அணையின் முழுக்கொள்ளவான 126.28 அடியில், 18 அடிக்கு மேல் குறைந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் 110 அடியாக குறைந்தது.இந்நிலையில், மேற்கு தொடர்ச்சிமலை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அணை மீண்டும் நேற்று தனது முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. தற்போது அணைக்கு வரும் 57 கனஅடி தண்ணீர் அப்படியே வராகநதியில் வெளியேற்றப்படுகிறது. வருகிறது. …

The post நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் 2வது முறை நிரம்பியது சோத்துப்பாறை அணை: பாசன விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chothupparai dam ,Periyakulam ,Sothupparai Dam ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால்...