×

பதவியேற்று ஒருவாரம் ஆகிறது என்னது... புதிய கலெக்டர் வந்துட்டாரா..? எம்எல்ஏ அதிர்ச்சியால் பரபரப்பு

சிக்கமகளூரு: பதவியேற்று ஒரு வாரமாகியும் புதிய கலெக்டர் வந்துள்ளது பற்றி எனக்கு இதுவரை தெரியாது என்று மூடிகெரே தொகுதி எம்.எல்.ஏ குமாரசாமி கூறியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தொகுதி பாஜ எம்.எல்.ஏவாக இருப்பவர் குமாரசாமி. இவர் சிக்கமகளூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் மாவட்டத்தில் மழை பாதிப்பு பணிகள் இதுவரை மேற்கொள்ளப்படாமல் உள்ளதை பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ குமாரசாமி சிக்கமகளூருவுக்கு புதிய மாவட்ட கலெக்டர் இன்னும் வரவில்லை. புதிய கலெக்டர் வந்தவுடன் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

இதைகேட்ட செய்தியாளர்கள், புதிய கலெக்டர் பதவியேற்று ஒரு வாரம் ஆகிவிட்டதாக கூறினர். இதைகேட்டு அசடு வழிந்த எம்எல்ஏ மாவட்டத்தில் புதிய கலெக்டர் வந்துள்ளது பற்றி இதுவரை எனக்கு தெரியாது. அதுபற்றி எனக்கு யாரும் தெரிவிக்கவில்லை. புதிய கலெக்டருடன் ஆலோசித்து மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார். மாவட்டத்திற்கு புதிய கலெக்டர் வந்து ஒரு வாரமாகியும் தொகுதி எம்எல்ஏ தனக்கு புதிய கலெக்டர் வந்தது தெரியாது என்று கூறியது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : MLA , It's been a week since the inauguration ... Has the new collector arrived ..? The MLA was shocked and shocked
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...