மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா!: சென்னை அண்ணா சாலையில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் பாடல் பாடி வாழ்த்து..!!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை ஒட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் மதிய உணவு வழங்கினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு கட்சி பிரமுகர்கள், ராகுல் காந்தி, கமல் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், திமுக எம்.பி.கனிமொழி, திமுக எம்.பி. தயாநிதி மாறன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், திருமாவளவன் உள்ளிட்ட பலரும் தங்களது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சென்னை அண்ணா சாலையில் உள்ள சிறப்பு பள்ளியில் தனது பிறந்தநாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார்.

சிறுமலர் பள்ளியில் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அச்சமயம் பாடல் பாடி பிறந்தநாள் காணும் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளி குழந்தைகள் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு மு.க.ஸ்டாலின் மதிய உணவு வழங்கினார். பின்னர் குழந்தைகளிடம் பேசிய அவர், பிறந்தநாளை ஒட்டி எனக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இருப்பினும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது தான் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Related Stories:

>