×

வரும் 26ம் தேதி நடைபெறும் எப்டிஏ தேர்வுக்குபலத்த பாதுகாப்பு: கோலார் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

கோலார்: மாநில அரசு துறையில் காலியாக இருக்கும் முதல்நிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் எழுத்து தேர்வு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.  மாநில அரசு துறையில் காலியாக இருக்கும் முதல்நிலை உதவியாளர் (எப்டிஏ) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. தேர்வு நடப்பதற்கு முதல் நாள் கேள்விதாள் வெளியாகியது. பல இடங்களில் நகல் எடுத்து வினியோகம் செய்யப்பட்டது. இதில் பெரியளவில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இத்தேர்வை வரும் 28ம் தேதி மீண்டும் நடத்துவதாக கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் வரும் 28ம் தேதி நடத்தப்படும் எழுத்து தேர்வில் எந்த முறைகேடும் நடக்காத வகையில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டதை தொடர்ந்து, தேர்வில் முறைகேடுகள் தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

அவரின் உத்தரவை ஏற்று மாவட்ட எஸ்பிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கோலார் மாவட்டத்தில் எப்டிஏ தேர்வு நடத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்.செல்வமணி தலைமையில் நேற்று சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கூடுதல் கலெக்டர் சினேகா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதில் மாவட்டத்தில் 19 மையங்களில் வரும் 28ம் தேதி நடக்கும் எழுத்து தேர்வில் எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்ககூடாது. தேர்வு சுமூகமாக நடக்க கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்வதுடன் ேபாலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்படும் என்றார்.

Tags : Kolar ,district administration , Tight security for FDA exam on 26th: Kolar district administration action
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்