×

மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்: இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது

சென்னை: இஸ்ரோ, 28ம் தேதி பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் மூலம் 19 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தயாரித்த ஸ்ரீசக்தி ஷாட் என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இது குறித்து கல்லூரி தலைவர் தங்கவேலு,  திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் செயற்கைக்கோளை உருவாக்கிய மாணவர்கள் பாவனா சாவந்த், நிகில் ரியாஸ், தருண் ரெட்டி, அஸ்வின் ரெட்டி நேற்று சென்னையில் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். ‘எங்கள் 10 வருட கனவு தற்போது சாத்தியமாகியுள்ளது. 2.5 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், பிகோ தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.


Tags : ISRO , Student-built satellite: ISRO launches into space
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...