×

மத்திய, மாநில அரசுகள் வரியை உயர்த்தியது தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க காரணம்...! ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் பேட்டி

ஈரோடு: தமிழகத்தில் இன்னும் 3 மாதத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றும் மக்களாட்சி அமையும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். நாடு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது பெட்ரோல், டீசல் விலை உயர்வு. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. மத்திய, மாநில அரசுகள் வரியை உயர்த்தியது தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க காரணம் எனவும் குற்றம் சாடினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பரப்புரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், திமுகவின் ஆட்சியை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் கைகளில் சமர்பிப்போம் என்று கருணாநிதி உயிரோடு இருந்தபோது உறுதிமொழி எடுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். அந்த உறுதிமொழி நிறைவேறும் காலம் நெருங்கி வருவதாக குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சிக்கான ஆதரவு மக்களிடையே வெளிப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது என அவர் கூறினார். மக்கள் கவலைகளை போக்கும் வகையில் வருகின்ற திமுக ஆட்சி செயல்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் இன்னும் 3 மாதத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றும் மக்களாட்சி அமையும். நாடு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது பெட்ரோல், டீசல் விலை உயர்வு. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. மத்திய, மாநில அரசுகள் வரியை உயர்த்தியது தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க காரணம் எனவும் குற்றம் சாடினார்.

Tags : Erotle ,BC ,Q. ,Stalin , The reason for the increase in petrol and diesel prices is the increase in taxes by the central and state governments ...! Interview with MK Stalin in Erode
× RELATED ரூ.8 லட்சம் மோசடி: பெண் காவலர் மீது வழக்கு