×

விதவையர் நலவாரியம் கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு விதவைப் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. பின்னர்  கூட்டாக  நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 40 லட்சத்திற்கும் அதிகமான விதவைப் பெண்கள் உள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான தனியாக நலத்துறை உருவாக்கப்பட்டிருப்பது போல் விதவைப் பெண்களுக்கும் விரிவான மாநிலக் கொள்கையை வெளியிட்டு விதவையர் நலத்துறையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். விதவைப் பெண்களின் வாழ்வு நிலை குறித்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களின் வாழ்வு மேம்பட நிதி ஒதுக்கீடும், வளர்ச்சி திட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும். விதவைகள் பாகுபாடு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். விதவையர் மற்றும் முதியோர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். விதவைப் பெண்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Widow Welfare Federation Request
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...