×

தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 36 தீயணைப்பாளர்கள் , நிலைய அலுவலர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி!!

சென்னை : தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 36 தீயணைப்பாளர்கள் மற்றும் நிலைய அலுவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் அறிக்கை -  18.2.2021

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி தீயணைப்பு நிலையத்தில் முன்னணி தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த திரு. ச. ஜீல்பிஹார் மற்றும் தீயணைப்போர் ஓட்டியாகப் பணிபுரிந்து வந்த திரு. கே. சரவணன்; புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த திரு. ரெ. முத்துகிருஷ்ணன்;   நவல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த திரு. அ. ஆஷிக்கான்;
    
இராமநாதபுரம் மாவட்டம், வழுதூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த திரு. து. சிவனேசதுரை; புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த திரு. மா. பழனிவேல்; ஈரோடு மாவட்டம், ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் முன்னணி தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த திரு. எஸ். ராமகிருஷ்ணன்; சென்னிமலை தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராகப் பணிபுரிந்து வந்த திரு. வி. மணி;    சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராகப் பணிபுரிந்து வந்த திரு. கே. எம். விஜயகுமார்;   
 
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் முன்னணி தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த திரு. டி. கோபிநாத்; செய்யூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த
திரு. ஆ. ஜார்ஜ்;சென்னை மாவட்டம், வண்ணையம்பதி தீயணைப்பு நிலையத்தில் முன்னணி தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த திரு. மை. பீட்டர்; வ.உ.சி. நகர் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராகப் பணிபுரிந்து வந்த திரு. பெ. அன்பழகன்;

மதுரை மாவட்டம், மேலூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த திரு. சி. ராஜதுரை;
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போர் ஓட்டியாகப் பணிபுரிந்து வந்த திரு. அ. தங்கவேல்; விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தீயணைப்பு நிலையத்தில் முன்னணி தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த திரு. க. இராதாகிருஷ்ணன்;
    
கரூர் மாவட்டம், புகளூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த  திரு. பெ. கதிர்வேல்;
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் தீயணைப்பு நிலையத்தில் யந்திர கம்மியர் ஓட்டியாகப் பணிபுரிந்து வந்த  திரு. எஸ். குணசேகரன்; திருத்துறைபூண்டி தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராகப் பணிபுரிந்து வந்த  திரு. எ. அழகுராஜ் ;
    
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராகப் பணிபுரிந்து வந்த  திரு. ஆர். குமரேசன்; திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராகப் பணிபுரிந்து வந்த  திரு. ஜோ. அலெக்சாண்டர்;நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராகப் பணிபுரிந்து வந்த  திரு. க. சி. பச்சமுத்து ;
    
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் முன்னணி தீயவீணைப்போராகப் பணிபுரிந்து வந்த  திரு. ப. வரதராஜூலு ; விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலையத்தில் முன்னணி தீயவீணைப்போராகப் பணிபுரிந்து வந்த  திரு. மா. செல்வம் ;
தென்காசி மாவட்டம், சுரண்டை தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராகப் பணிபுரிந்து வந்த திரு. இ. செல்வராஜ்; கடையநல்லூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போர் ஒட்டியாகப் பணிபுரிந்து வந்த
திரு. இ. ராஜேந்திரன்;

சேலம் மாவட்டம், சங்ககிரி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த திரு. எஸ். சுப்பிரமணி;வேலூர் மாவட்டம், வேலூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த திரு. எம். ராஜேந்திரன்;காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தீ தடுப்புக் குழுவில் தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த திரு. மு. கணேசன்; ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராகப் பணிபுரிந்து வந்த திரு. க. ஜெயராமன்; இராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தீயணைப்பு நிலையத்தில் முன்னணி தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த திரு. வி. சிவானந்தன்;

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராகப் பணிபுரிந்து வந்த திரு. டி. பொன்ராஜ்;  ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த
திரு. ஏ. மகேந்திரன்;
    
சேலம் மாவட்டம், நங்கவள்ளி தீயணைப்பு நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த திரு. கே. ரமேஷ்;
    
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த திரு. ஆ. அருண்;
    
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்போராகப் பணிபுரிந்து வந்த திரு. வை. சிலம்பரசன்;
    
ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.உடல் நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த 36 தீயணைப்பாளர்கள் மற்றும் நிலைய அலுவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    
மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 36 தீயணைப்பாளர்கள் மற்றும் நிலைய அலுவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : firefighters ,incidents ,Tamil Nadu , நிதியுதவி
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...