×

மது உள்ளே சென்றால் மதி வெளியே செல்லும்!: வேலூரில் குடிபோதையில் மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தை கைது..!!

வேலூர்: வேலூர் அருகே குடும்ப தகராறில் குடிபோதையில் தந்தை மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவருக்கு 2 மகன்கள் 1 மகள் என 3 பேர் உள்ளனர். இந்நிலையில் குடிபோதையில் இருந்த சுப்பிரமணி, வீட்டில் இருந்த தனது மகளை திட்டியதாக தெரிகிறது. இதனை தட்டிக்கேட்ட இரண்டாவது மகன் வினோத்திடம் தந்தை சுப்பிரமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி வீட்டில் வைத்திருந்த இரட்டை குழல் துப்பாக்கியை எடுத்து மகன் வினோத்தை சுட்டிருக்கிறார். இதில் படுகாயமடைந்த வினோத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் கிராமிய போலீசார் தலைமறைவாக இருந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சுப்ரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் பெற்ற மகனையே தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Tags : Mathi ,Vellore , Vellore, drunk, son, gun, murder, father arrested
× RELATED வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து...