×

தங்கத்தில் விலை இன்று குறைந்ததால் நகை வாங்குவோர் சற்று நிம்மதி.: ஒரு கிராம் ரூ.4,416-க்கும், ஒரு சவரன் ரூ.35,328-க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.384 குறைந்துள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி இரண்டரை சதவீதம் குறைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக தங்கத்தில் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டுவருகிறது. 6-ம் தேதி சவரன் 35,752, 8ம் தேதி 35,720-க்கு, 9ம் தேதி 36,296-க்கு, 10ம் தேதி  36,176க்கு, 11-ம் தேதி சவரன் 36,192க்கு, 12-ம் தேதி சவரன் ரூ.35,864க்கு,15-ம் தேதி சவரன் ரூ.35,656-க்கு, 16-ம் தேதி சவரன் ரூ.35,712-க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4,457க்கும், சவரன் ரூ.35,656-க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை தங்கம் விலை உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.11 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,468க்கும், சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,744க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் உயந்தது. அதாவது நேற்று முன்தினம் விலையை விட ஒரு கிராம் ரூ.4,464க்கும், சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.35,712க்கும் விற்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,416-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. 


Tags : Jewelry buyers , Jewelery buyers relieved by lower gold prices today: A gram sells for Rs 4,416 and a razor for Rs 35,328
× RELATED தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு...