×

FASTag முறைக்கு இனி கால அவகாசம் கிடையாது: 8 வழிசாலை திட்டம் தொடர்பாக இன்று ஆலோசனை: நிதின் கட்கரி

டெல்லி: FASTag முறைக்கு இனி கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். நாட்டின் முதுகெலும்பாக சிறு, குறு தொழில்கள் இருக்கின்றது. மேலும் கிராமப்புறங்களில் தோல் உற்பத்திக்கு சிறிய நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மாட்டுச் சாணம் மூலம் பெயிண்ட் தயாரிக்கும் முறை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என அமைச்சர் கூறினார். கழிவுநீரை கூட பணமாக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார். விவசாயிகள் தங்களுடைய டிராக்டர்களுக்கு இயற்கை எரிவாயுவை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இயற்கை எரிவாயுவை பயன்படுத்தினால் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க முடியும் என கூறினார். 8 வழிசாலை திட்டம் தொடர்பாக சென்னையில் இன்று மாலை மத்திய அமைச்சர் நிரின் கட்கரி ஆலோசனை நடத்துகிறார். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக பேட்டியளித்தார். சென்னை-பெங்களூரு இடையே புதிய அதிவிரைவுச் சாலை திட்டத்திற்கு விரைவில் பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என கூறினார்.


Tags : Nitin Gadkari , FASTag, no more time, no time, Nitin Gadkari
× RELATED தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி