×

ரூ.110.4 கோடியில் 10 பாலங்கள், நடை மேம்பாலம் புறவழிச் சாலை: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், திருநல்லூர் - விராலிமலை சாலையில் 9 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர் கடலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் 100 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்கள், ஒரு புறவழிச்சாலை மற்றும் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய ஒரு நடை மேம்பாலத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், கீழ்கட்டளை அருகே மவுண்ட் - மேடவாக்கம் சாலை மற்றும் பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக 29 கோடியே 50 லட்சம் ரூபாய் மதீப்பீட்டில் துரைப்பாக்கம் - பல்லாவரம் போக்குவரத்து திசையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை கி.மீ 25/6-ல் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் மற்றும் தாம்பரம் ரயில்வே நிலைய நடைமேம்பாலத்தை இணைத்து ஆகாய நடைபாதை அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக 9 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜி.எஸ்.டி சாலை பகுதியில் கட்டப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம். திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், பிஞ்சிவாக்கம் - ஹரிஜன் காலனி சாலை, பிஞ்சிவாக்கத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே 10 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் 110 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 பாலங்கள், ஒரு நடை மேம்பாலம், மற்றும் ஒரு புறவழிச்சாலையினை திறந்து வைத்தார்.

Tags : bridges ,Chief Minister ,pedestrian overpass bypass road , 10 bridges at a cost of Rs. 110.4 crore, pedestrian overpass bypass road: Chief Minister opened
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...