×

அஸ்வின் சுழலில் சுருண்டது இங்கிலாந்து...! 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 134 ரன்களில் ஆல் அவுட்: இந்திய அணி அபாரம்

சென்னை: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 134 ரன்களில் இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களை எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி 134 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 329/10 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் முதல் செஷன் முடிவு வரை 106/8 ரன்கள் சேர்த்துள்ளது.

முதல் வரிசை பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர். இரண்டாம் நாள் முதல் செஷனின் கடைசி பந்தில் லாரன்ஸ் 9 ரன்கள் மட்டும் எடுத்து நடையைக் கட்டினார். அடுத்த செஷனில் பென் ஸ்டோக்ஸ் 8 (16), ஓலி போப் 0 (0) ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள். மைதானம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்ததால், பௌலர்கள் எவ்வித அழுத்தமும் இல்லாமல் பந்துவீசினர். இதனால், பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ஆடிய ஸ்டோக்ஸ் 18 (34) ரன்கள் சேர்த்து, அஸ்வின் சுழலில் போல்ட் ஆனார்.

அடுத்து, போட்டி துவங்கியதிலிருந்து பந்துவீசாத குல்தீப் யாதவ், முகமது சிராஜிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. குல்தீப் சிறப்பாகப் பந்துவீசிய நிலையில் விக்கெட் எதுவும் விழவில்லை. முகமது சிராஜ் தான் வீசிய முதல் பந்தில் ஓலி போப் 22 (57) விக்கெட்டை எடுத்து அசத்தினார். தொடர்ந்து மொயின் அலி 6 (30), ஓலி ஸ்டோன் 1 (4) ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இது இங்கிலாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அடுத்து வந்த வீரர்களும் நிலைக்க வில்லை. இந்நிலையில் இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் இஷாந்த் சர்மா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Tags : England ,Aswin ,innings ,Test ,team ,Indian ,Aparam , England curled up in Aswin's spin ...! All out for 134 in the first innings of the 2nd Test: Indian team Aparam
× RELATED மலர்களோடு பூத்துக் குலுங்கும்