×
Saravana Stores

சிட்டிஸ் திட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் வை- பை 600 வகுப்பறைகளில் டிஜிட்டல் முறையில் கல்வி: சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை: சிட்டிஸ் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வை- பை வசதி செய்யப்படவுள்ளது. மேலும் டிஜிட்டல் முறையில் கல்வி கற்கும் வகையில் 600 வகுப்பறைகள் சீரமைக்கப்படவுள்ளது. பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதி உதவியுடன் சிட்டிஸ் திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளை உலக தரத்திற்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கும் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு 95.25 கோடி. இதில் 76.2 கோடியை பிரான்ஸ் மேம்பாட்டு முகமை அளிக்கும். மீதமுள்ள தொகையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும். இதன்படி பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட உள்ளது.

இந்த திட்டத்தின்படி சென்னையில் 28 மாநகராட்சி பள்ளிகள் சீரமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 2 பள்ளிகளை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. குறிப்பாக அனைத்து பள்ளிகளிலும் வை- பை வசதி செய்யப்படவுள்ளது. 600 வகுப்பறைகள் டிஜிட்டல் முறை கல்விக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக ஸ்மார்ட் சிட்டி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சிஸ்டிஸ் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உட்கட்டமைப்பு, ஆயவகம், டிஜிட்டல் முறையில் கல்வி, ஆசிரியர்களுக்கான பல்வேறு பயிற்சிகள், விளையாட்டு வதிகள் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தபடவுள்ளது. உட்கட்டமைப்பு வசதியில் பள்ளி கட்டிடம், வகுப்பறை, சுற்றுச்சுவர், கழிவறை உள்ளிட்டவைகள் மேம்படுத்தபடவுள்ளது.

டிஜிட்டல் முறையில் கல்வி கற்கும் வகையில் 600 வகுப்பறைகள் சீரமைக்கப்படவுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் வை - வை வசதி ஏற்படுத்தபட உள்ளது. இதைத் தவிர்த்து பயோ மெட்ரிக் சிஸ்டம், சிசிடிவி கேமிரா உள்ளிட்டவைகளும் செயல்படுத்தபட உள்ளது. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் வகையில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மாண்டிசேரி முறையில் கல்வி அளிப்பதற்கான பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது. அனைத்தும் ஒருங்கிணைந்த விளையாட்டு திட்டம் அமல்படுத்தபடவுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

* சிட்டிஸ் திட்டத்தின்கீழ் சென்னை  மாநகராட்சி பள்ளிகளை உலக தரத்திற்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கும் திட்டம் செயல்படுத்தபட உள்ளது.
* இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு 95.25 கோடி.
* இதில் 76.2 கோடியை பிரான்ஸ் மேம்பாட்டு முகமை அளிக்கும்.
* மீதமுள்ள  தொகையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும்.




Tags : Schools ,600 Classrooms , Digital Education in Wi-Fi 600 Classrooms in All Schools in the Citizens Project: Chennai Corporation Project
× RELATED டிசம்பர் மாதத்திற்குள் திறக்க திட்டம் இதுவரை 20,000 பள்ளிகளில் இணையதள வசதி