கேரள எதிர்க்கட்சி தலைவர் சென்னித்தலாவுக்கு சால்வை 6 போலீசார் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்:கேரளாவில் சட்டப்பேரவை நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் காசர்கோட்டில்  இருந்து திருவனந்தபுரம் வரை ‘ஐஸ்வர்ய யாத்திரை’ என்ற பெயரில் ஏதிர்க்கட்சி தலைவர் ரமேஷ்  சென்னித்தலா வாகன பேரணி நடத்தி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் இந்த பயணம் எர்ணாகுளத்தை வந்தடைந்தது. அன்று இரவு அவர்  எர்ணாகுளம் விருந்தினர் மாளிகையில் தங்கினார். அப்ேபாது,  கல்லார்க்காடு உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிஜூ, போலீஸ் தலைமையக முகாம் ஏட்டு  சில்ஜன், எஸ்பி அலுவலக உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ் ஆன்டனி, நகர  கட்டுப்பாட்டறை உதவி சப்-இன்ஸ்ெபக்டர் ஷிபு ெசரியான், தலைமையக ஏட்டு திலீப்  சதானந்தன் ஆகியோர் சென்னித்தலாவை சந்தித்து சால்வை அணிவித்தனர். இந்த  புகைப்படம் ேநற்று சமூக வலைதளங்களில் ைவரலானது. இதையடுத்து, 6 போலீசாரும் நேற்று சஸ்பெண்ட்  ெசய்யப்பட்டனர்.

Related Stories:

>