×

நீட், ஜெஇஇ தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை...ஆதனால் தான் தனியார் மூலம் ஆன்லைனில் பயிற்சி.: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: மத்திய அரசின் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரும் அளவுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்றும், ஆதனால் தான் தனியார் மூலம் ஆன்லைனில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நீட் தேர்வுக்கு 21 ஆயிரம் விண்ணப்பித்திருந்த நிலையில் 5,800 பேர் மட்டுமே இலவச பயிற்சி எடுக்கின்றனர். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும். அதனையடுத்து 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை நூலகமாக மற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம் என தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் இல்லை. அதற்கு பதில் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு உதவியுடன் டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : government school teachers ,Senkottayan , There are not enough government school teachers to train for NEET and JEE exams ... that is why training online through private: Minister Senkottayan
× RELATED ₹10 லட்சம் ஊக்கத்தொகையுடன் அண்ணா...