×

16 திசை தொகுதிகள்

தமிழகத்தில் வடக்கு-தெற்காக, கிழக்கு-மேற்காக  என பார்த்தால் மொத்தம் 16 சட்டப்பேரவை  தொகுதிகள் உள்ளன. என்ன! தமிழகத்தில் 234 தொகுதிகளாச்சே? 16 என்று தப்பா புள்ளி விவரம் தர்றீங்களா என குழம்ப வேண்டாம். இது, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்ற பெயர்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை. ஆரம்பத்தில் ஊர் பெயர்களில் மட்டும்தான் தொகுதிகள் இருந்தன. இந்த திசைகளுக்கு வேலை இல்லாமல் இருந்தது. ஆனால் மக்கள் தொகை பெருகி நகரங்கள் பெருநகரங்களான பிறகுதான் ஊருடன் திசைகளும் சேர்ந்துக் கொண்டன.  விரிவாக்கம் என்ற பெயரில் பாரம்பரிய ஊர்கள் மாநகர எல்லைக்குள் போனாலும் அந்த ஊரின் பெயர்களின் தொகுதிகள் அமைக்கப்படுவதில்லை. இருக்கும் 4 திசைகளையும் மாநகருடன் சேர்த்து தொகுதிகளாக பிரித்து விடுகின்றனர்.

அப்படி திசைகளை சேர்த்து உள்ள தொகுதிகள்   சேலம் மேற்கு, சேலம் வடக்கு,  சேலம் தெற்கு, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய என 16 திசைகளை சொல்லும் சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன சென்னை தமிழகத்தின் பெரு நகரமாக இருந்தாலும், இங்குள்ள 20 பேரவை தொகுதிகளில் ஒன்றில் கூட இந்த திசைகள் இல்லை. அந்தந்த பகுதிகளில் உள்ள முக்கிய ஊர் பெயர்களுடன் தொகுதிகள் தொடருகின்றன. ஆனால் நாடாளுமன்ற தொகுதிகள் மட்டும் சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மத்திய என 3ஆக பிரிக்கப்பட்டுள்ளன.

Tags : There are a total of 16 Assembly constituencies in Tamil Nadu, north-south and east-west.
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில்...