×

3-4 தொழிலதிபர்கள்தான் மோடி அரசுக்கு கடவுள்...விவசாயிகளோ, இளைஞர்களோ மோடி அரசுக்கு கடவுள் அல்ல : ராகுல் விளாசல்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கு அவரது நண்பர்களான 3-4 தொழிலதிபர்கள்தான் கடவுள் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசை பல்வேறு விவகாரங்களில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்மையில், மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2021 அறிக்கையை சமர்ப்பித்தார். இதையடுத்து, மந்திய அரசின் பட்ஜெட் 2021ஐ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

பட்ஜெட் 2021 குறித்து ராகுல் காந்தி சமீபத்திய ட்வீட்களில் கூறியுள்ளதாவது:

பட்ஜெட்டில் இந்திய ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்காகவோ அல்லது விவசாயிகளுக்காகவோ ஏதுமில்லை. இளைஞர்கள், விவசாயிகள் நலன் ஆகிய இரண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.மோடி அரசாங்கத்திற்கு 3-4 தொழிலதிபர் நண்பர்கள் மட்டுமே கடவுளாக உள்ளனர்!.

இதேபோன்று மத்திய பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் என்ற வார்த்தையை ஆறு முறையும், கார்ப்பரேட்டுகள்/ நிறுவனங்கள் என்ற வார்த்தையை 17 முறை பயன்படுத்தியுள்ளார். ஆனால், நாட்டின் பாதுகாப்பு(Defence) மற்றும் சீனா (china) என்ற வார்த்தையை ஒருமுறை கூட பயன்படுத்தவில்லை

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags : government ,God ,Modi ,Rahul Vilasal , ராகுல் காந்தி
× RELATED சொல்லிட்டாங்க…