×

வேடசந்தூர் அருகே பள்ளத்தில் இறங்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

வேடசந்தூர்: வேடசந்தூர்- வடமதுரை ரோட்டில் ஸ்ரீராமபுரம் அருகே பாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல சாலையின் வலது புறத்தில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து கொச்சின் நோக்கி வந்த லாரி ஸ்ரீராமபுரம் அருகே வந்தபோது பாலம் அமைப்பது தெரியாமல் பள்ளத்தில் இறங்கியது. அதிர்ஷ்டவசமாக லாரி கவிழாமல் முன்பக்க டயர் மட்டும் இறங்கியதால் டிரைவர் உயிர் தப்பினார். பள்ளத்தில் இறங்கிய லாரியால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பி்ன்னர் அப்பகுதி மக்களே பாலம் அமைக்க இருந்த இடத்தை மணல் கொண்டு நிரப்பி வாகனங்கள் செல்ல வழிவகுத்தனர். தொடர்ந்து கிரேன் மூலம் லாரியை அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ‘கடந்த ஓராண்டுக்கும் மேலாக சாலை, பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இரவுநேரங்களில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு  வாகன சேதமும் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை, பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : ditch ,Vedanthur , Vedasandur, abyss, landing lorry, transport
× RELATED சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்