மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆவடியில் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம்: நாளை, நாளைமறுநாள் நடைபெறுகிறது : சா.மு.நாசர் அழைப்பு

ஆவடி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடியில் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் (பிப்.6, 7ந்தேதி) நாளை, நாளை மறுநாள் ஆகிய இரு நாட்கள் நடக்கிறது. இதில், பட்டதாரி, டிப்ளமோ படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும் என திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் அழைப்பு விடுத்துள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு ”எஸ்.எம்.நாசர் அறக்கட்டளை\” சார்பில் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம் ஆவடி, சி.டி.எச் சாலை, பெட்ரோல் பங்க் அருகில் உள்ள மைதானத்தில் (பிப்.6,7ந்தேதி) நாளை, நாளை மறுநாள் ஆகிய இரு நாட்கள் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமிற்கு, திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.

இந்த முகாமில் ஆவடி தொகுதியில் வேலை இன்றி தவித்து வரும், பட்டதாரி இளைஞர்களுக்கு இந்தியாவின் தலைசிறந்த 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மூலம் சுமார் 5ஆயிரத்துக்கு மேற்பட்ட வேலைவாய்ப்பை அறக்கட்டளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த முகாமில், 2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை தேர்ச்சி பெற்றிருந்து பி.இ, பி.டெக், எம்.டெக், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, டிப்ளமோ, டிகிரி, ஐடிஐ ஆகிய கல்வி தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.  மேலும், அவர்கள் தங்களது சுய விவரம், 2 பாஸ்போர்ட் புகைப்படம்,  அசல் மற்றும் நகல் சான்றிதழ் ஆகியவற்றுடன் வர வேண்டும். எனவே, ஆவடி தொகுதிக்கு உட்பட்ட பட்டதாரி, டிப்ளமோ இளைஞர்கள் இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை  பயன்படுத்தி கொண்டு, உங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள இந்த அரிய வாய்ப்பை தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என்று சா.மு.நாசர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories:

>