×

வீட்டு கழிவறையில் புகுந்த சிறுத்தை:'வனத்துறையினர் பிடிக்க முயன்றும் தப்பியது

மங்களூரு, பிப்.4 சிறுத்தையிடமிருந்து தப்பிக்க கழிவறைக்குள் நுழைந்த நாயுடன் சிறுத்தையையும் கழிவறைக்குள் வீட்டு உரிமையாளர் பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்கனரா மங்களூரு மாவட்டம் குக்கே சுப்பிரமண்யா அருகேயுள்ள கைகம்பா கிராமத்தை சேர்ந்தவர் ரேகப்பா. இவர் வீட்டில் நாய் வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை  ஒன்று ரேகப்பாவின் வளர்ப்பு நாயை துரத்தி வந்தது. இதையடுத்து சிறுத்தையிடமிருந்து தப்பித்து ஓடிவந்த நாய் வீட்டின் கழிவறையில் ஓடி புகுந்து கொண்டது. நாயை பின்தொடர்ந்து துரத்தி வந்த சிறுத்தையும் கழிவறைக்குள் புகுந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரேகப்பா உடனே சிறுத்தையையும், நாயையும் கழிவறைக்குள் வைத்து வெளிப்பக்கத்தில் பூட்டினார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த வனத்துறையினர் கழிவறைக்குள் உள்ள சிறுத்தையை பிடிக்க கூண்டு கொண்டு வந்தனர். கழிவறைக்குள் வெளியே கூண்டை வைத்து கதவை திறந்தபோது வெளியில் வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிக்காமல் வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கழிவறையில் பூட்டி வைத்த சிறுத்தையை பிடிக்க முடியாமல் தப்ப விட்டது வனத்துறையினரின் திறமையின்மையை காட்டுகிறது. அவர்களிடம் ஏர் கன் இருந்தும் அதை பயன்படுத்தி சிறுத்தையை பிடிக்க போதுமான பயிற்சி இல்லாததே காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.மேலும் பயிற்சி பெற்ற வனத்துறையினரை அனுப்பி தப்பியோடிய  சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்று பொதுமக்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

Tags : Foresters , Leopard, Forest
× RELATED முக்கூருத்தி, சைலன்ட்வேலி தேசிய...