×

சூயிங்கம்மை முதலில் மென்றது யார்?

சூயிங்கம்மை முதலில் மென்றது யார்? இந்தக் கேள்விக்கு மிகத் துல்லியமான பதிலைச் சொல்வது கடினம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சூயிங்கம் மெல்வது என்ற பழக்கம் இன்றைய தலைமுறைக்கானது மட்டும் அல்ல. மிகப் பழங்காலந்தொட்டே பல்வேறு ஆதி இனக் குழுக்கள் சூயிங்கம் போன்ற இழுவைத்தன்மை கொண்ட பிசினான பொருளை மென்று வந்திருக்கின்றன. ஒருவகையில் அவையே இன்றைய சூயிங்கம்களின் தாத்தாக்கள்.ஃபின்லாந்தில் உலகின் மிகத்தொன்மையான சூயிங்கம் என ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிர்ச் பட்டையைக்  கண்டுபிடித்திருக்கிறார்கள். இதில் மனிதர்களின் பற்கள் தடம் பதிந்துள்ளது. கிரீஸில் மஸ்டிக் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட ரெசினை சூயிங்கம்மாக மெல்வது அன்று தாடைகளுக்கான பயிற்சியாக இருந்திருக்கிறது.

இவர்களை வழிமொழிந்த மயன், அஸ்டெக் இனக்குழுவினர், சபோடில்லா மரத்திலிருந்து எடுத்த பசையை மென்று வந்தனர். கிரீஸில் மாஸ்டிக் எனும் மரப்பிசினும், மாயன் நாகரிகத்தில் சிக்லி என்ற மரப்பட்டையும், சீனத்தில் ஜின்செங் என்ற செடியின் வேரும், எஸ்கிமோக்களிடையே ப்ளப்பர் என்ற தாவரமும், தென் அமெரிக்கர்கள் கோகோ இலைகளையும் இந்தியாவில் வெற்றிலை விதை
களும் ஒரு காலத்தில் சூயிங்கம் போல் மெல்லப்பட்டிருக்கின்றன.

ஜிஸிலி எனப்படும் பசையைத் திருமணமான பெண் அல்லது விதவை  ஒருவர் பொது இடத்தில் மென்றால் அவர் விபச்சாரி என்றும், ஆணாக இருந்தால் ஓரினச்சேர்க்கையாளர் எனவும்  முடிவு கட்டுவது அன்றைய  வழக்கம் என்கிறார் Unwrapping the History of Chewing Gum என்ற நூலின் எழுத்தாளரான லூயிஸ் வெர்னர்.  மெக்சிகோவில் சிக்கில்  என்னும் பசையை வேகவைத்து பக்குவப்படுத்தி மென்று வந்தனர். பின்னாளில்  இதனை 19 ஆம் நூற்றாண்டில்  அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தியவர்  மெக்சிகன் ஜெனரலான சான்டா அன்னா. டயர்களுக்கு பயன்படும் ரப்பரும் சூயிங்கம்மில் முதலில் சேர்க்கப்பட்டு, பின் அதற்கு பதிலாக அதில் வெந்நீர் சேர்க்கப்பட்டு உருண்டை வடிவில் விற்பனை செய்யப்பட்டது.சூயிங்கத்தை அக்காலத்தில் பெண்கள் மெல்லுவது தடைசெய்யப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களிடமிருந்து சூயிங்கம் மெல்லும் பழக்கம் உலகம்  முழுக்க  பரவத்தொடங்கியது. பாலிவினைல் அசிட்டேட், பாலிமர், ரெசின் ஆகிய வேதிப் பொருட்கள் சேர்க்கப்
படுவதால்தான் இவை ஒட்டும்தன்மையும் நெகிழ்வும் பெறுகின்றன. என்றாவது ஒருநாள் சூயிங்கம் மெல்வது தவறு இல்லை. எப்போதும் மென்றுகொண்டிருப்பது ஆபத்து என்கிறார்கள் மருத்துவர்கள்.



Tags : சூயிங்கம்
× RELATED இயர் பட்ஸ், ஹெட் போன்களின் அபரிவிதமான...