×

தேங்க் யூ ஹீரோஸ்!

அமெரிக்காவின் ஃபிஷர்-பிரைஸ் நிறுவனம் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று. குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான பொம்மைகள், பார்பி பொம்மைகள், கார்கள் உள்ளிட்ட விளையாட்டு பொம்மைகள் தவிர காமிக்ஸ் நாயகர்கள், உலகப் புகழ்பெற்ற ஆளுமைகள் எனப் பலருக்கும் பொம்மை வார்ப்புகளை வெளியிட்டு கெளரவிப்பது இந்த நிறுவனத்தின் வழக்கம்.கடந்த வருடம் உலகையே உலுக்கிய கொரோனாவுக்கு எதிராக தீரமுடன் போராடிய மருத்துவப் பணியாளர்களை கெளரவிக்கும் விதமாக இந்த நிறுவனம் ‘தேங்க்யூ ஹீரோஸ்’ என்ற சீரியஸில் மருத்துவப் பணியாளர்கள் பொம்மை வரிசை ஒன்று வெளியிட்டு அவர்களை கெளரவப்படுத்தியுள்ளது. மொத்தம் பதினாறு வகையான பொம்மைகள் கொண்ட இந்த சீரியஸில் மருத்துவர்கள், செவிலியர்கள், இஎம்டி எனப்படும் அவசரகால சிகிச்சை நிபுணர்கள், மளிகைப் பொருட்கள் விற்பவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மற்றும் டெலிவரி ஓட்டுநர்கள் ஆகியோருக்குத்தான் செம மவுசு. இந்த பொம்மை ஒவ்வொன்றும் இந்திய ரூபாயில் ஆயிரத்து நூறு முதல் ஆயிரத்து ஐநூறு வரை போகின்றன. ஆறு மாதங்களுக்கு முன்பே இவை வெளியிடபட்டாலும் இப்போதுதான் அதிரடியாக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன இந்த பொம்மைகள். குறிப்பாக, கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் தங்கள் மருத்துவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இந்த பொம்மைகளைப் பரிசளித்து நெகிழ்கிறார்கள்.

Tags : ஹீரோஸ்!
× RELATED துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை...