×

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது : மத்திய அரசு

டெல்லி : தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை என இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக எம்பிக்கள் குரல் எழுப்பிய நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். தமிழக மீனவர்களை, 2020 டிச., முதல் இலங்கை கடற்படை வீரர்கள் தாக்கி கைது செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து ஜன.,18ல் சென்ற மீனவர்கள் படகை இலங்கை கடற்படை கப்பல் மோதி மூழ்கடித்தது. இதில் நான்கு மீனவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மாநிலங்களவையில் தமிழர் மீனவர் பிரச்னை தொடர்பாக திமுக, அதிமுக எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.தமிழக மீனவர்கள் 4 பேர் படகுடன் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக எம்பிக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதே போல் 4 தமிழக மீனவர்களை பிடித்து, இலங்கை கடற்படை அடித்துக் கொன்றதற்கு கண்டனம் தெரிவித்த  திருச்சி திமுக எம்.பி. சிவா,அடிக்கடி பாதிக்கப்படுவதால் மீன்பிடி தொழிலை விட்டு விட தமிழக மீனவர்கள் யோசிக்கின்றனர் என்றார்.   இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 4 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கை அரசுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, என்றார்.


Tags : Sri Lankan ,government ,killing ,Tamil Nadu ,Central Government ,fishermen , Federal Government, Minister Jaisankar, Ministry of External Affairs
× RELATED கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்...